2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மட்டக்களப்பு பட்டதாரிகளின் வேண்டுகோள் பரிசீலனை

Princiya Dixci   / 2020 நவம்பர் 26 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், வ.சக்தி, எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரி பயிலுநர்களாக இணைத்துக் கொள்ளப்படாத 389 பட்டதாரிகளின் மேன்முறையீடு பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு வருவதாக, மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.

மேற்படி, 389 பட்டாதாரிகளின் மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் தற்பொழுது பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட செயலக ஊடகப்பிரிவு, இன்று (26) செய்தி வெளியிட்டுள்ளது. 

அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 123 பட்டதாரிகளும் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 6 பட்டதாரிகளும் மேன்முறையீடு செய்திருந்தனர்.

“இதுதவிர, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 57 பேரும், ஏறாவூர்ப் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் 31 பேரும், ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவில் 26 பேரும், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 25 பேரும், காத்தான்குடி மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா 22 பேரும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 16 பேரும், கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 15 பேரும், போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 13 பேரும், மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 12 பேரும், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் 11 பேரும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 10 பேரும் மேன்முறையீடு செய்துள்ளனர். இவர்களது வேண்டுகோள்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,088 பட்டதாரி பயிலுநர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்ததுடன், 1,966 பட்டதாரி பயிலுநர்கள் மாத்திரமே 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தமது கடமையைப் பொறுப்பேற்றுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .