Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 10 , பி.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, எப்.முபாரக்
மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இன்று (10) பெய்த கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழைபெய்துவருகின்றது. இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மழை காரணமாக பல வீதிகள் ஏற்கனவேநீரில் மூழ்கியுள்ளதுடன், தாழ்நிலங்களில் உள்ள வீடுகளும் நீரில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளது.
கடும் வறட்சிக்கு பின்னர் தொடர்ச்சியாக மழைபெய்துவரும் நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கும் அதேநேரம் சில தாழ்நிலங்களில் உள்ள விவசாய நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் நேற்று (09) முதல் இன்று காலை வரை தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக இம்மாவட்டத்தின் தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கின.
இம்மாவட்டத்தின் தம்பலாகாமம், கந்தளாய், கிண்ணியா ,மூதூர் மற்றும் முள்ளிப்பொத்தானை போன்ற பகுதிகளின் தாழ்நிலப் பகுதிகளும் சில சிறு வீதிகளும் நீரில் மூழ்கி இரண்டு அடிக்கு மேல் நீர் காணப்பட்டது.
மாவட்டத்தின் உள்ள சிறு குளங்களான கந்தளாய், கல்மெட்டியாவ, வான்எல, மணிராசம், மற்றும் பரவிபாஞ்சான் போன்ற குளங்களின் நீர் மட்டமும் சற்று அதிகரித்துக் கணப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
30 minute ago
38 minute ago
53 minute ago