2024 டிசெம்பர் 12, வியாழக்கிழமை

மட்டக்களப்பு - கொழும்பு போக்குவரத்து தடை

Editorial   / 2024 நவம்பர் 27 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


எச்.எம்.எம்.பர்ஸான்
 
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

அந்தவகையில், மன்னம்பிட்டிய சந்தி (மகா ஒயா) வீதி  உடைந்து காணப்படுவதால் மட்டக்களப்பு - கொழும்பு வீதி மூடப்பட்டுள்ளது.

அதேபோன்று, மன்னம்பிட்டி, வெலிகந்தை, புனாணை ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் அவ்வீதியூடாகவும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புனாணை பகுதியில் புகையிரதப் பாதையை குறுக்கறுத்து நீர் அதிகரித்துச் செல்வதால் மட்டக்களப்பு - கொழும்பு புகையிரத சேவையும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .