Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 நவம்பர் 28 , பி.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி துயிலும் இல்லம், தாண்டியடி
துயிலுமில்லம், தரவை துயிலுமில்லம், வாகரை கண்டலடி துயிலுமில்லங்களில், தமிழர்களின்
விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும்
மாவீரர் தின நினைவேந்தல் நேற்றையதினம் (28) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் பெருமளவான
மாவீரர்களின் உறவுகள் முன்னிலையில் மாவீரர் தின நிகழ்வு நிகழ்வு உணர்வுபூர்வமாக
நடைபெற்றது.
இதன்போது மாலை 6.05மணிக்கு ஈகச்சுடரேற்றப்பட்டு மணி ஒலிக்கப்பட்டு அகவணக்கம்
செலுத்தப்பட்டது.
பலாலி விமானப்படை தாக்குதலில் வீரகாவியமான கரும்புலி மேயர் ஜீவரஞ்சனின் தாயார்
பொதுச்சுடர் ஏற்றினார்.
மாவீரர்களின் பெற்றோர், உறவுகள் இதன்போது கண்ணீர்மல்க விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்தி
தமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தினர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .