2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் மாவட்ட சிறுவர் சபை மீளமைப்பு

Freelancer   / 2023 ஜூன் 09 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு  மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாவட்ட சிறுவர் சபை உறுப்பினர்கள் தெரிவு, உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (08) நடைபெற்றது.

சிறுவர் உரிமை மேம்பாட்டுத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், 14 பிரதேச செயலகப் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட சிறுவர்களில் இருந்து சிறுவர் சபைக்கான  உறுப்பினர்கள் வாக்கெடுப்பு மூலம்  தலைவர், உப தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் தெரிவு செய்யப்பட்டார்கள்.

சிறார்களின் பங்கேற்பு உரிமையை மேம்படுத்துவதற்கு உதவும் முகமாக இச்சபை இரு வருடம் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சிறுவர் உரிமை மேம்பாட்டை மேலும் வலுப்படுத்த ஏயூ லங்கா (AU Lanka) நிறுவனம் இணைந்து செயற்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிகழ்வில் மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ரீ. மதிராஜ், பதவி நிலை உதவியாளர் எம்.ரிலா, ஏயு லங்கா நிறுவன இணைப்பாளர் நந்தகுமார் மற்றும் 14 பிரதேச சிறுவர் மேம்பாட்டு  உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .