Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2022 மார்ச் 14 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பாளர் சங்கத்தின் 52ஆவது மாநாடு, மட்டக்களப்பில் இன்று (14) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பாளர் சங்கத்தின் தலைவர் என்.இதயக்கமலன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பாளர் சங்கத்தின் தலைவர் சாந்தகுமார மீகம, உதவிச் செயலாளர் திலகரட்ன யட்டவர, நிர்வாக குழு உறுப்பினர் சோபா ரட்ன, தபால் சேவைகள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளர் திருமதி ஜெ.திருச்செல்வம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கடந்த ஆண்டுக்கான கூட்டத்தின் கூட்டறிக்கை மற்றும் கணக்கறிக்கை வாசிக்கப்பட்டு, சங்க உறுப்பினர்களினால் அங்கிகரிக்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.
அத்துடன், 2022 மற்றும் 2013ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவுக்கான தேர்தலும் நடத்தப்பட்டு உறுப்பினர்கள் வாக்களிக்கும் நிகழ்வும் நடைபெற்றதை தொடர்ந்து, புதிய ஆண்டுக்கான நிர்வாகமும் தெரிவுசெய்யப்பட்டனது.
இதனடிப்படையில் புதிய தலைவராக மீண்டும் முன்னாள் தலைவர் என்.இதயக்கமலன் தெரிவுசெய்யப்பட்டதுடன், புதிய செயலாளராக ஜி.ரஞ்சித் தெரிவுசெய்யப்பட்டார்.
பத்துப் பேர் கொண்ட நிர்வாக உறுப்பினர்களும் வாக்குகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டதுடன், பொருளாளர் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
20 minute ago
20 minute ago
38 minute ago