2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் மழை; குளங்களின் நீர்மட்டம் உயர்வு

Freelancer   / 2022 பெப்ரவரி 14 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பெரும்போக வேளாண்மை அறுவடையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் மாவட்டத்தின் சிறிய மற்றும் பெரிய குளங்களின் நீர் மட்டங்களும் அதிகரித்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உன்னிச்சைக்குளத்தின் நீர்மட்டம் 32அடி 10அங்குலம், 
உறகாமம் குளத்தின் நீர்மட்டம் 14அடி 11அங்குலம், 
வாகனேரிக்குளத்தின் நீர்மட்டம் 18அடி 9அங்குலம், 
கட்டுமுறிவுக்குளத்தின் நீர்மட்டம் 11அடி 8அங்குலம், அக்குளத்தில் 2அங்குல மேலதிக நீர் வெளியேற்றப்படுகின்றது, 
கித்துள்வெவெ குளத்தின் நீர்மட்டம் 8அடி 5அங்குலம், 
வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 15அடி 5அங்குலம், 
புணாணை அணைக்கட்டு 7அடி 9அங்குலமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை 8.30 மணி வரையில் கடந்த 24 மணித்தியாலங்களில் உன்னிச்சைப் பகுதியில் 39 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 50மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், வாகனேரி பகுதியில் 116.7மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .