Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஜூலை 14 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்திரோதயம் கலை இலக்கிய பெருமன்றம், ‘கா’ கலை இலக்கிய வட்டம் ஆகியவை இணைந்து நடத்தும் நூலியலாளர் என். செல்வராஜாவின் ‘மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம்’ நூல் வெளியீட்டு விழா, எழுத்தாளரும் அதிபருமாகிய ச. மணிசேகரன் தலைமையில், மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் சனிக்கிழமை (15) காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பேராசிரியர் சி. மௌனகுருவும் கௌரவ விருந்தினராக கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சி. சந்திரகாந்தனும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
நூல் அறிமுகத்தை கவிஞர் த. உருத்திராவும் நூல் நயவுரையை சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் க. மோகனதாசனும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகரும் இலங்கை நூலகர் சங்க துணைத் தலைவருமான செ. சாந்தரூபனும் நிகழ்த்த உள்ளார்கள்.
இந்நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர் பூ. சீவகன் (பிரதம ஆசிரியர், ‘அரங்கம்’) சிறப்பு னஅதிதியாகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார். நூலின் முதல் பிரதியை மூத்த எழுத்தாளர் கவிஞர் செ. குணரெத்தினம், ஆய்வாளர் என். சரவணன் (நோர்வே), கலாநிதி து. பிரதீபன் (நூலகர் - ஊவா வெல்லச பல்கலைக்கழகம்), கலாநிதி சு. சிவரெத்தினம் (சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம்), சைவப்புரவலர் வி. ரஞ்சிதமூர்த்தி (தலைவர், மட்டக்களப்பு தமிழ்ச் சங்கம்), பேராசிரியர் திருமதி பாரதி கென்னடி (பணிப்பாளர், சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகம்), பேராசிரியர் பாலசுகுமார் (இலண்டன்), பேராசிரியர் சி.சந்திரசேகரம் (கிழக்கு பல்கலைக்கழகம்), எந்திரி என்.சிவலிங்கம் (ஆணையாளர், மட்டு. மாநகர சபை) ஆகியோர் பெற்றுக்கொள்வார்கள். நிகழ்ச்சிகளை கி. சிறிகாந்தன், செல்வி ம. பவதாரணி ஆகியோர் தொகுத்துவழங்குவார்கள்.
க. விஜயரெத்தினம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago