Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Editorial / 2023 ஒக்டோபர் 20 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.சரவணன்
வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கட்சிகள் இன்று 20 ம் திகதி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தது. எனினும் அதனை பொருட்படுத்தாமல் அரச மற்றும் தனியயார் போக்குவரத்து சேவைகள் பாடசாலைகள் இயங்கியதுடன் அரச திணைக்களங்கள் இயங்கின. இதனால், மட்டக்களப்பில் ஹர்த்தால் பிசு பிசுத்துப் போயிருந்தது.
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு விடுத்த அச்சுறுத்தல் மற்றும் மேச்சல்தரை அபகரிப்பு போன்ற தமிழர் பகுதி ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை (20) ஹர்த்தாலுக்கு தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக இணைந்து அழைப்பு விடுத்தன.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமைபோல் இலங்கை போக்குவரத்து பஸ்வண்டிகள் தனியார் போக்குவரத்து பஸ்வண்டிகள் பாடசாலை சேவை பஸ்வண்டிகள் போக்குவரத்தில் ஈடுபட்டதுடன் சில பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தராதிருந்தபோது பல பாடசாலைகளுக்கு 50 சதவீதமான மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை வருகை தந்திருந்தனர்.
மாணவர்களுக்கான 2ம் தவணைபரீட்சை இடம்பெறுவதனால் பரீட்சை இடம்பெறுமா? இல்லையா? அல்லது பாடசாலை இல்லையா? என்ற நிலை தெரியாத நிலையில் பாடசாலைகளுக்கு மாணவர்களை பெற்றோர்கள் கொண்டு சென்று விட்டுவிட்டு வெளியே நீண்ட நேரமாக காத்திருந்தனர்.
மாணவர்களுக்கான பரீட்சை காலை 9-30 மணிக்கு இடம்பெறும் என பாடசாலைகளில் இருந்து அறிவித்ததையடுத்து அல்லோலகல்லோலப்பட்ட பெற்றோர், வீட்டில் இருந்த மாணவர்கள் உடனடியாக அவசர அவசரமாக அழைத்துச் சென்று பாடசாலைக்கு அனுப்பிவைத்தனர்.
இதேவேளை, வெளி மாவட்ட மற்றும் உள்ளூர் போக்குவரத்து சேவையில் அரச, தனியார் பஸ்வண்டிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில் ஈடுபட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago