2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் தொடர் மழை

Princiya Dixci   / 2021 ஜனவரி 04 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எம்.அஹமட் அனாம், ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன், வ.சக்தி, க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட நொச்சிமுனை, நாவற்குடா, வேலூர், கூழாவடி, மாமாங்கம், குமாரபுரம், புன்னைச்சோலை, இருதயபுரம், கறுவப்பங்கேணி, பாரதி வீதி, எல்லை வீதி உட்பட பல பகுதிகள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளன.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக முடக்கப்பட்டுள்ள காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 

மேற்படி பகுதிகளில் பல வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் பலர் தஞ்சம் புகுந்துள்ளமையைக் காணமுடிகின்றது.

இதேவேளை, படுவான்கரையின் பல பகுதிகளிலும் வெள்ள அபாயம் காணப்படுகின்றது. போரதீவுப்பற்று, பட்டிப்பளை, வவுணதீவு, ஏறாவூர்ப்பற்று, கிரான் பிரதேச செயலகப் பரிவுகளில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இன்று (04) அதிகாலை வரை பெய்த தொடர் மழை காரணமாக வெள்ள அபாயம் மேலும் அதிகரித்துள்ளது. 

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 142.6 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பணிப்பாளர் எம்.ரமேஸ் தெரிவித்தார். இது நாட்டில் 24 மணி நேரத்தில் பெய்த அதிக மழை வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .