2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் தேசிய பொலிஸ் வீரர்கள் தினம்

Princiya Dixci   / 2022 மார்ச் 21 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 158ஆவது தேசிய பொலிஸ் வீரர்கள் தினம் நாடளாவிய ரீதியில் இன்று (21) அனுஷ்டிக்கப்படுகின்றது.

நாட்டுக்காக உயிர்நீர்த்த பொலிஸ் வீரர்களை நினைவுகூரும் வகையில் நடத்தப்படும் இந்நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காரியாலயத்தில் நடைபெற்றது.

அக்காரியாலயத்தின் முன்பாகவுள்ள பொலிஸ் வீரர்கள் நினைவுத் தூபியில், மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் உதவி பொலிஸ் அத்தியட்கசர்கள், மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், உயிர்நீர்த்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் உறவினர்கள் மற்றும் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பொலிஸ் கொடியேற்றப்பட்டதுடன், பொலிஸ் வீரர்கள் நினைவுத்தூபியில் மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிர்நீர்த்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதுவரையில் இலங்கையில் 3,143 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன், இதில் யுத்த காலத்தில் 2,598 பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஏனைய வகையில் 545 பொலிஸ் உத்தியோகத்தர்களும் உயிரிழந்துள்ளதாக இங்கு உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .