2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் சிரமதானம்

Editorial   / 2022 பெப்ரவரி 10 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன்

நாட்டில் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் அதிகரித்துக் காணப்படும் நிலையில், டெங்குக் காய்ச்சல் பரவலும் அதிகரித்து வருவதாக சுகாதாரப் பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனையடுத்து, மட்டக்களப்பில் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரனின் பணிப்புரைக்கமைய, டெங்கு ஒழிப்பு சிரமாதான வேலைத்திட்டம் கிரமமாக இடம்பெற்று வருகின்றது.

பொது இடங்களில் சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வாராந்த சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் பல்நோக்கு அபிவிருத்தி திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் சிரமதான நடவடிக்கை, மாவட்டச் செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, பலநோக்கு அபிவிருத்தி உதவியாளர்கள் இச்சிரமதான நடவடிக்கையில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, மாவட்டச் செயலக வளாகத்தை சுத்தம் செய்தனர்.

மேலும், கொவிட் 19 சுகாதார வழிமுறைகளை மக்கள் முழுமையாக பின்பற்றி நடப்பதுடன், டெங்கு நுளம்புப் பரவலில் இருந்து அவதானமாக இருக்குமாறும் சுகாதாரப் பிரிவினால் வலியுறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .