Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 26 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளரான இலட்சுமனன் தேவபிரதீபன் எனும் ஊடகவியலாளர் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான அவர் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வந்தாறுமூலை பிரதான வீதியில் அமைந்திருந்த பேருந்து தரிப்பிடம் ஒன்று இடித்து அகற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தான் சுதந்திரமாக செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது தடீரென ஒருவர் வந்து தன்னை தாக்கியதாகவும், இதனால் தலையின் பின்பக்கம், மற்றும் கையிலும், வலி ஏற்பட்டுள்ளதாகவும், இவ்வாறு தன்னைத் தாக்கியவர் கிழக்கு பல்கழலைக்கழகத்தில் பணிபுரியும் ஒருவர் எனவும், பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் இலட்சுமனன் தேவபிரதீபன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் மிலேச்சத்தனமான சம்பவங்கள் தொடர்பில் ஊடக அமைப்புக்களும், சிவில் அமைப்புக்களும், கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
24 minute ago
24 minute ago
56 minute ago