2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

மட்டக்களப்பில் அரச ஊழியர்களுக்கு தடுப்பூசி

Johnsan Bastiampillai   / 2021 ஜூலை 12 , பி.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார அமைச்சினால் மக்களுக்காக அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரச களப்பணியாளர்களுக்கான 2ம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் நேற்றைய தினம் முதல் ஆரம்பமாகியுள்ளன.
 
மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரிவிட்குட்பட்ட அரச நிறுவனங்களில் கடமையாற்றம் ஊழியர்களுக்கு வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலுகத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்டது. 
 
இங்கு கால்நடை அபிவிருத்தி திணைக்களம், மற்றும் தேசிய குடிநீர் வழங்கல் திணைக்களம், பிரதேச வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் கல்வி திணைக்கள ஊழியர்களுக்கு 2ம் கட்ட தடுப்பூசி பொது சுகாதார ஊழியர்களினால் ஏற்றப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் அனட் ஜோதிலக்ஸ்மி தலைமையில் இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .