Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2022 ஜூன் 16 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு நகர் பகுதியில் நுகர்வோர் அதிகார சபையினர் அரிசி விற்பனை நிலையங்கள், அரிசி ஆலைகளை புதன்கிழமை (15) முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையில், அரச கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த இரு வர்த்தக நிலையங்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்துள்ளதாகவும், இதுவரை 8 அரிசி விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அதிகார சபை பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்துள்ளார்.
அண்மைகாலமாக நுகர்வோர் அதிகார சபைக்கு தொடர்ச்சியாக வர்த்தக நிலையங்களில் அரிசி அரச கட்டுப்பாட்டை விட அதிகவிலைக்கு விற்பனை செய்வதாகவும், பல வியாபாரிகள் அரிசியினை பல இடங்களில் பதுக்கி வைத்துள்ளதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து நேற்று மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றை முற்றகையிட்டபோது, அங்கு அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்ததையடுத்து, அந்த வர்த்தகருக்கு எதிராக வழக்கு தாக்குதல்செய்யப்பட்டுள்ளதுடன், அதனை தொடர்ந்து ஊறணி பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றை முற்றுகையிட்ட போது அங்கு அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வதை கண்டுபிடித்து அவர்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்குதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரச கட்டுப்பாடான சோற்று அரிசி 220 ரூபாவும், பச்சையரி, 210 ரூபாவும், சம்பா அரிசி 230 ரூபாவும், கீரிச் சம்பா 260 ரூபாவும் ஆகும். ஆனால் இந்த விலைகளுக்கு மேலாக விற்பனை செய்கின்ற வியாபாரிகள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் எமக்கு அறிவிக்குமாறும், இதனால் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், இவர்களுக்கு நீதிமன்றம் ஊடாக ஒரு இலட்சம் ரூபா தொடக்கம் 5 இலட்சம் ரூபா வரையில் தண்டப்பணம் விதிக்கமுடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், வியாபாரிகள் அரிசியை வியாபாரத்தளத்தில் இருந்து எடுத்துச் சென்று வேறு இடத்தில் பதுக்கி வைத்துள்ளதாகவும், வீடுகளில் பதுக்கி வைத்திருப்பதாகவும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. எனவே மிக விரைவில் வீடுகளில் பதுக்கி வைத்திருக்கின்ற அரிசிகளை கண்டறிந்து பதுக்கல் சட்டத்துக்கு கீழ் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனவே நுகர்வேர் அதிகார சபை வர்த்தக நிலையங்களை சுற்றிவளைப்பை சோதனை நடவடிக்கை மேற்கொள்ளும் போது அதிக விலைக்கு விற்பனை செய்வதை கண்டுபிடிக்கப்படுமாயின் எந்த பாரபட்சமும் பாராது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்குதல் செய்து சட்டநடவடிக்கை எடுக்கப்படும் ஆகவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் வர்த்தகர்கள் மிகவும் கவனமாக இருந்து கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago