Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2021 மே 16 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, ஆரையம்பதி சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் 06 வீதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
கடந்த 11ஆம் திகதி, கிரான்குளத்தில் ஒருவர் மரணமானதைத் தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் பெருமளவானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டது.
இதையடுத்து, மட்டக்களப்பு மாவட்ட கொவிட் 19 தடுப்புச் செயலணிக் கூட்டத்தில் குறித்த பகுதியை முடக்குவதற்கான பரிந்துரை தேசிய கொவிட் 19 தடுப்புச் செயலணிக்கு அனுப்பப்பட்டது.
இதன்படி, கிரான்குளம் கிராமசேவகர் பிரிவின் 'சி' பிரிவிலுள்ள நெசவு நிலைய வீதி, வேலாப்பொடி வீதி, கண்ணகி அம்மன் கோவில் வீதி, கிரான்குளம் கிராமசேவகர் பிரிவு 'பி' பிரிவிலுள்ள லோக்றோட் வீதி, விதானையார் வீதி, அப்புகாமி வீதி ஆகிய வீதிகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
முடக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பிரிவினர் தொடர்ந்தும் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர். தவிர, பொலிஸாரும் இராணுவத்தினரும் அப்பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago