Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2022 பெப்ரவரி 27 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம்
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி, மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக கையெழுத்து போராட்டம் இன்று (27) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில், வாலிபர் முன்னணியின் தலைவர் லோ.தீபாகரன் தலைமையில் இக்கையெழுத்துப் போராட்டமும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றன
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், கோவிந்தன் கருணாகரம், இரா.சாணாக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், பிரதேச சபை தவிசாளர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
இவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்து இட்டு, அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்தார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
6 minute ago
16 minute ago
16 minute ago