2025 மார்ச் 04, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் வாள்வெட்டு - ஒருவர் படுகாயம்

Freelancer   / 2025 மார்ச் 03 , பி.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக (03) இரவு இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

இந்த வாள்வெட்டு தாக்குதலை 10 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

படுகாயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இரண்டு மரக்கறி வியாபாரிகளுக்கு இடையில் ஏற்பட்டிருந்த முரண்பாடே வாள்வெட்டுத் தாக்குதலுக்கு காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .