2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மக்கள் விரும்பும் ஆட்சி முறையை கோரி ஆர்ப்பாட்டம்

Freelancer   / 2022 ஜூலை 12 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கனகராசா சரவணன்)

சர்வகட்சி ஆட்சி முறை வேண்டாம் மக்கள் விரும்பும் ஆட்சி முறையை கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் ஜே.வி.பி கட்சி ஆதரவாளர்கள்  ஆர்பபாட்டத்தில்  இன்று செவ்வாய்க்கிழமை (12) ஈடுபட்டனர்.

ஜே.வி.பி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் என்.சுந்தரேசன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்த்தையடுத்து, இன்று காலை 10 மணிக்கு காந்திபூங்காவிற்கு முன்னால்  கட்சி ஆதரவாளர்கள் சிலர் ஓன்று கூடினர்.

இதனையடுத்து, ஊழலைத்தவிர நீங்கள் உருப்படியாக செய்தது என்ன, நாட்டை விற்று ஏப்பம் விட்ட கொள்ளையரை விரட்டியடிப்போம், திருடர்களை விரட்டியடிப்போம், உங்களுக்கு கொண்டாட்டம் மக்களுக்கு திண்டாட்டம், அரச நிறுவனங்ளை விற்பதை நிறுத்து, போராட்டத்தை நிறுத்தாமல் தொடருவோம், 

மக்கள் ஆட்சிக்கு இடம்கொடு, மக்களை ஏமாற்றும் உளக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு? சர்வகட்சி அரசாங்கம் வேண்டாம் என்ற பல சுலோகங்கள் ஏந்தியவாறு கோசங்கள் எழுப்பியவாறு சுமார் அரை மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .