2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

மக்கள் பாவனைக்கு பொதுக் கிணறு

Princiya Dixci   / 2021 மார்ச் 22 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி, க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான அருவி பெண்கள் வலையமைப்பு, கிராம மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் முகமாக, பொதுக் கிணறு ஒன்றை அமைத்து, அதனை மக்களின் பாவனைக்கு இன்று (22) வழங்கியுள்ளது. 

மட்டக்களப்பு, கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அக்குராணை, மினுமினுத்தவெளி மற்றும் முறுத்தானை ஆகிய கிராம மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் வசதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக 7 இலட்சம் ரூபாய் செலவில் கிராமத்துக்கான பொதுக் கிணறு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டதுடன், பெண்களுக்கான சுகாதார பொருட்கள் அடங்கிய பொதிகளும் இதன்போது வழங்கப்பட்டன.

சட்டத்தரணியும் அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளருமாகிய மயூரி ஜனகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன், கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.யோகராஜா, அகம் மனிதாபிமான வள நிலைய இணைப்பாளர் க.லவகுசராஜா, கிராம சேவை உத்தியோகஸ்தர், சமுர்த்தி உத்தியோகஸ்தர், கிராம அபிவித்திச் சங்க தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X