Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 மே 25 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏயெஸ் மௌலானா
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சட்ட முதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் இன்று அதிகாலை தனது 61 ஆவது வயதில் காலமானார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுகவீனமுற்று, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணித்துள்ளார்.
இவர் 2001 தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினராகவும் பிரதிச் செயலாளர் நாயகமாகவும் பதவி வகித்திருந்தார்.
பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை ஸ்தாபித்து, றிஷாத் பதியுதீன் தலைமையில் அக்கட்சியின் செயலாளர் நாயகமாக செயற்பட்டு வந்தார்.
வர்த்தக, வாணிப, கைத்தொழில், அமைச்சின் ஆலோசகராகவும் இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம், அசோக் லேலண்ட் நிறுவனம் என்பவற்றின் தலைவராகவும் பதவிகளை வகித்திருக்கிறார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் பாராளுமன்ற பொதுத் தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
21 Apr 2025
21 Apr 2025