2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மகள் துஷ்பிரயோகம்; பஸ் தரிப்பிடத்தில் தந்தை கைது

Editorial   / 2021 டிசெம்பர் 07 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

 

தனது மகளான 13 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து தப்பிச் செல்ல முயன்றவரை, காத்தான்குடி பொலிஸார், இன்று (07) காலை கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி, காத்தான்குடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது, மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பகுதியில் நேற்று (6) மாலை இடம்பெற்றுள்ளது.

தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை, இரவு கொழும்புக்குத் தப்பி செல்வதற்காக காத்தான்குடி பஸ் தரிப்பிடத்தில் மறைந்திருந்த போது,    காத்தான்குடி  பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா  தலைமையில் சென்ற பொலிஸார், சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதானவர் 36 வயதுடையவர் என்பதுடன், இவரது மனைவி மத்திய கிழக்கு நாடொன்றில் பணியாற்றி வருவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .