Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2021 ஒக்டோபர் 28 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு மகப்பேற்று வைத்திய நிபுணர் மற்றும் சிறுவர் வைத்திய நிபுணர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.ஜாபீர் தெரிவித்தார்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கொவிட் சிகிச்சை நிலையமாகவும் செயற்பட்டு வரும் நிலையில், தற்போது படிப்படியாக வழமை நிலைமைக்கு திரும்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த வகையில், மேற்படி இரு நியமனங்களுடன், தொற்றா நோய்க்கான சிகிச்சைப் பிரிவு மற்றும் அது தொடர்பான பரிசோதனைகள் ஆலோனை வழங்கல் என்பனவும் காத்தான்குடி ஆதார வைத்தியாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதற்கான வைத்தியர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இப்பிரிவு தினமும் காலை தொடக்கம் பிற்பகல் வரையும் இயங்கும் எனவும் இதனை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
9 hours ago