Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2021 ஒக்டோபர் 31 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பண்டார தெரிவித்தார்.
வாழைச்சேனை, பன்சலை வீதியில் இன்று (31) அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட மேற்படி பெண்ணிடமிருந்து, 09 போதைப்பொருள் மாத்திரைகள் மற்றும் 386 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பில், மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் மற்றும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மா சிங்க ஆகியோரின் பணிப்புரையின் கீழ், மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
9 hours ago