2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

போதைப்பொருள் வியாபாரிகள் கைது

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 15 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பில் மிக நீண்டகாலமாகப் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் இருவரை, காத்தான்குடியில்வைத்து மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார   தலைமையிலான குழுவினர் கைது செய்துள்ளனர்.

காத்தான்குடி, 3 ஆம் குறுக்குத்தெருவில் உள்ள வீடொன்றில் வைத்தே இவர்கள் கடந்த 12 ஆம் திகதி  இரவு  9.00  மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2 கிலோ 50 கிராம் கேரள கஞ்சாவும் இக்கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .