2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி

Freelancer   / 2023 நவம்பர் 27 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், கனகராசா சரவணன்

25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் வவுனியாவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற தகவலலொன்றையடுத்து புதிய காத்தான்குடி கர்பலா பகுதிகளில் வைத்தே ஐஸ் போதை பொருளுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .