2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

போதைபொருள்களுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2022 மார்ச் 28 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் ஹெரோய்ன், ஐஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் மற்றும் போதை மாத்திரைகளை வைத்திருந்த நபரொருவர், நேற்றிரவு (27) கைது செய்யப்பட்டுள்ளார் என மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் பொலிஸ் சுற்றிவளைப்பில், வாழைச்சேனை கோவில் வீதியில் வைத்து மேற்படி நபர் மடக்கிப் பிடிக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 200 மில்லிக்கிராம் ஹெரோய்ன், 200 மில்லி  கிராம் ஐஸ் போதை பொருள், 1,120 மில்லி கிராம் கஞ்சா, 4 போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டனர்.

கைது செய்யப்பட்டவரை, வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .