Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 ஜூலை 23 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸார் நடாத்திய யுக்திய போதை ஒழிப்பு வேலை திட்டத்தின் கீழ் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ். ரமேஷ் தெரிவித்தார்.
இச்சுற்றிவளைப்பின்போது, செவ்வாய்க்கிழமை (23) காலை பெண் ஒருவருடன் எட்டு பேர் காத்தான்குடி பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், நாவற்குடா, நொச்சிமுனை, கல்லடி பிரதேசங்களிலிருந்து சுமார் 40 லீற்றர் கசிப்புடன் எட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் மீட்கப்பட்ட போதைப் பொருள்களும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .