2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

பொலிஸுக்கு பயந்து ஆற்றுக்குள் பாய்ந்த மோட்டார் சைக்கிள்

Editorial   / 2024 ஜனவரி 21 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோட்டார் சைக்கிள் விபத்தில் நபரொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்தின் ஆற்றுப்பகுதியில் வைத்து  ஞாயிற்றுக்கிழமை  (21)  இடம்பெற்றுள்ளது.

தலைக்கவசம் அணியாமல் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நபர் மோட்டார்  போக்குவரத்து பொலிஸார் நிற்பதைக் கண்டு நிறுத்துவார்கள் என்ற பயத்தில் வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தபோது சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஓட்டமாவடி ஆற்றில் விழுந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எச்.எம்.எம்.பர்ஸான்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .