Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 ஜனவரி 08 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் மீது இளைஞன் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த 4 பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து சம்பவத்தில் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் அவரது தாயார், சகோதரி உள்ளிட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் சனிக்கிழமை (06) ஆஜர்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 17 ம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
கொக்குவில் 2ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் சம்பவதினமான வெள்ளிக்கிழமை 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு மதுபோதையில் இருந்துள்ளார். அந்த பகுதி வீதியில் நிறுத்திவைத்திருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டதையடுத்து முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளது. இந்நிலையில், அதன் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இதனையடுத்து மதுபோதையில் இருந்த இளைஞனை அவரது தாயார் சகோதரி தமது தோல்களில் சுமந்தவாறு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்ற போது அங்கிருந்த பொலிஸ் சாஜன் ஒருவர் கதிரையில் இருக்குமாறு தெரிவித்துள்ளார். அப்போது குறித்த இளைஞன் அந்த கதிரையை தூக்கி பொலிஸ் மீது தாக்குதல் மேற்கொண்டதில் அவர் படுகாயமடைந்தார்.
இந்த நிலையில் பொலிஸ் நிலையத்தில் இருந்த ஏனைய பொலிஸார் குறித்த இளைஞனை மடக்கிபிடித்து கைவிலங்கிட்டு பொலிஸ் நிலைய கைதி கூட்டின் வெளிபகுதில் வைத்திருந்த நிலையில் அந்த இளைஞன் தனது தலையை கூண்டின் கதவில் அடித்துக்கொண்டார்.
மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் அதனை தடுக்க முற்பட்டபோது அவரை வாயால் கடித்து அவரது சீருடையை கிழித்துள்ளார். அந்த பொலிஸ் உத்தியோகத்தரை காப்பாற்ற சென்ற இரு பொலிஸார் மீதும், இளைஞனுடன் அவரது தாயார், சகோதரிகள் இணைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
காயமடைந்த 4 பொலிஸார் மற்றும் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திய இளைஞன் உட்பட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச் சம்பவத்தில் இளைஞன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் சனிக்கிழமை (06) ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 17ம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, கைது செய்யப்பட இளைஞன் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் வீதியல் செல்வோர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago