2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அவசர கலந்துரையாடல்

Freelancer   / 2022 ஒக்டோபர் 12 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

தற்போது நாடு எதிர் கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை ஓரளவுக்கேனும் மேம்படுத்தும் நோக்கில் LDSP திட்டத்தின்கீழ் உணவு பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் உள்ளுராட்சி மன்ற சேவைகள் எனும் மூன்று துறைகளை அடிப்படையாகக் கொண்ட விசேட கலந்துரையாடல்  இன்று(12) நடைபெற்றது.

குச்சவெளி பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் பிரதேசசபையின்   தவிசாளர்  ஏ.முபாறக் அவர்களின் தலைமையில்  இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் மூலம் முக்கிய மூன்று விடயங்களின் அடிப்படையில் அபிவிருத்திகளை நோக்காகக் கொண்டு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு உள்ளுராட்சி   மன்றங்களுக்கு  சுமார் 35 மில்லியன் ரூபாய் நிதியை  உலக வங்கி ஒதுக்கீடு செய்துள்ளது. 

இந் நிதியினைக் கொண்டு மக்களின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது  தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .