2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

பொதுமக்கள் நடமாடும் இடங்களில் தொற்று நீக்கம்

Princiya Dixci   / 2021 மே 10 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

ஓட்டமாவடி பிரதேசத்தில் பொதுமக்கள் நடமாடும் இடங்களை தொற்று நீக்கும் நடவடிக்கை, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையால் நேற்று (09) முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா பரவல் கட்டுப்பாட்டுத் திட்டத்துடன் இணைந்த வகையில் இந்தத் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதனைக் கட்டுப்படுத்த அப் பகுதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

இதற்கமைய, பொதுச் சந்தை, பஸ் தரிப்பிடங்கள், மீன் விற்பனை நிலையங்கள், புடவைக் கடைகள் மற்றும் சலூன் கடைகள் உட்பட வர்த்தக நிலையங்கள் போன்றவற்றில் தொற்று நீக்கப்பட்டுள்ளன.

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர் தலைமையில் இடம்பெற்ற இப்பணியில் பிரதேச சபை ஊழியர்கள் இணைந்து கொண்டு, தொற்று நீக்கும் வேலையை மேற்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .