2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பொது மக்களுக்கு பள்ளிவாசல்களில் முக்கிய அறிவிப்பு

Freelancer   / 2023 மார்ச் 12 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிலர் பொய்யான காரணங்களை கூறி பண வசூலிப்பில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி பள்ளிவாசல்களில் பொதுமக்களுக்கு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நடவடிக்கைகள் மீராவோடை, செம்மண்ணோடை, பதுரியாநகர், மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறு வீடு வீடாக வரும் நபர்கள் தாம் பிரதேச பள்ளிவாசல்களின் அனுமதியோடு வருவதாக பொய் கூறி பண வசூலிப்பில் ஈடுபடுகின்றனர்.

இவர்களின் பொய்யான கதைகளை நம்பி யாரும் பணத்தை வழங்க வேண்டாம் என்றும் பள்ளிவாசல்களில் பொதுமக்களுக்கு மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .