Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Janu / 2024 செப்டெம்பர் 02 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் ஓந்தாச்சிமடத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (01) மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் மிகவும் பலத்த காயங்களுக்குட்பட்ட நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்கைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் .
விபத்தில் முச்சக்கர வண்டி நொருங்கியுள்ளதுடன், பேரூந்தின் முன்பகுதிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக விபத்து தொடர்பில் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் தெரிவித்தனர் .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .