2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பெற்றோலுடன் மண்ணெண்னை கலப்பு

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன்

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பெற்றோலுடன் மண்ணெண்னை கலக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக மோட்டார் வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்பியவர்கள், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த சம்பவம், நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று அதிகளவான மோட்டார் சைக்கிள்களுக்கு பெற்றோல் நிரப்பிவிட்டு செல்லும் போது, வீதியில் மோட்டார் வாகனத்தை செலுத்தமுடியாமல் போனதாகவும் இதனால் மோட்டார் சைக்கிள்கள் பழுதடைந்துவிட்டதாகவும் பிரதேச வாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பின்னர் பிரதேச வாசிகள் வெற்றுக்கலன்களில் பெற்றோலை பெற்று பார்த்தவேளையில் அதில் மண்ணெண்னை கலப்பு இடம்பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் பற்றி 119 இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தி பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், குறித்த எரிபொருள் நிலையத்தில் பெற்றோல் விற்பனை செய்வதை இடைநிறுத்தியுள்ளனர்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரி ஐ.பி.சாந்தகுமார் தலமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X