2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பெரும் சிக்கலில் மட்டக்களப்பு மக்கள்

Freelancer   / 2022 மே 25 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்ணெண்ணை இல்லாமை மற்றும் எரிவாயு இல்லாத காரணத்தினால் மக்கள் தினமும் தமது அன்றாட கடமைகளை நிறைவேற்றுவதில் பெரும் சிக்கல் நிலைகளை எதிர்நோக்குவதாக தெரியவருகின்றது.

மட்டக்களப்பு நகர் உட்பட பல பகுதிகளில் எரிவாயு அடுப்புகள் மற்றும் மண்ணெண்ணை அடுப்புகளே பாவிக்கப்பட்டுவரும் நிலையில், எரிவாயு மற்றும் மண்ணெண்ணையை பெற்றுக்கொள்வதில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

நேற்றைய தினம் மட்டக்களப்பு திருமலை வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணை விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று காலை தொடக்கம் பிற்பகல் வரையில் கொழுத்தும் வெளியிலிலும் பெண்கள், வயோதிபர்கள் என ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்றதை காணமுடிந்தது.

ஒரு கிலோ மீற்றருக்கும் அதிகமான நீண்ட வரிசையில் நின்று மண்ணெண்ணையினை மக்கள் பெற்ற போதும்,டிபெருமளவானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலையினையும் காணமுடிந்தது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .