Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2021 மே 12 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், க.விஜயரெத்தினம்
பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கையாளும் சேகிள் இளம் பெண்கள் அமைப்பால் வடிவமைக்கப்பட்ட செயலியூடாக இயங்கும் விசேட அலைபேசி இலக்கம், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன் தலைமையில், மாவட்டச் செயலகத்தில் இன்று (12) அறிமுகம் செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ் முடக்க காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன், கிழக்கு மாகாணத்துக்குள் செயற்படும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 070 550 6600 எனும் அவசர அலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பை ஏற்படுத்தி, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முறைப்பாடு செய்து, சம்மந்தப்பட்ட அரச பிரிவுகளினூடாக தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
வாரத்தில் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய தினங்களில் காலை 10 மணி தொடக்கம் பிற்பகல் 02 மணிவரை இந்த அலைபேசி இலக்கம் செயற்பாட்டில் இருக்கும்.
இத்திட்டம், அம்பாறை மாவட்டத்தில், பாதிக்கப்பட்ட பெண்கள் அரங்கம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில், சுயம் சமூக மாற்றத்துக்கான அமைப்பு என்பவற்றின் ஒருங்கிணைப்புடன் செயற்படுத்தப்படுகின்றது.
இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட உதவிச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், சேகிள் இளம் பெண்கள் அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் அஜானி காசிநாதர், அமைப்பின் நிதி முகாமையாளர் சத்தியசீலன் கார்த்தியாயினி, பெண்கள் அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் அருணாளினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago