2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பெண்களின் டிஜிட்டல் அறிவை மேம்படுத்தல்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 05 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தால் (கபே) ஏற்பாடு செய்யப்பட்ட, "ஜனனி" டிஜிட்டல் மேம்பாட்டு திட்டத்தின் பயிற்சிப்பட்டறை, ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் நேற்று (04) நடைபெற்றது.

கபே நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தலைமைத்துவத்தின் கீழ், இந்நிகழ்வை மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கந்தவேல் காண்டிபன் மற்றும்  ஜனனி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜே.எவ். காமிலா பேகம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்திருந்தனர்.

நிகழ்வின் சிறப்பு பேச்சாளராக ஐரெஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க கலந்துகொண்டதுடன், வளவாளர்களாக கலாவர்ஷி கனகரட்ணம்  மற்றும் நிஸ்ஸங்க்க ஹரேந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.

இப் பயிற்சிப்பட்டறையில் இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் தொழில்நுட்ப பாதுகாப்பு நடவடிக்கைகள், தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் வழிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றி விளக்கமளிக்கப்பட்டன.

உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாவட்ட பெண் அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பெண் சிவில் பிரதிநிதிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .