2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பூங்கா வளாக கடைத் தொகுதிகளுக்கு அடிக்கல் நாட்டல்

Editorial   / 2022 மார்ச் 02 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு வேலைத்திட்டங்கள் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கமைவாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளராக கடமையாற்றி மரணித்த மர்ஹூம் லெப்பை ஹாஜியாரின் நினைவாக லெப்பை ஹாஜி சமாதான பூங்கா சபையால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.  

இதன் பெயர் பலகை மற்றும் பூங்கா வளாகத்தில் அமைக்கப்படவுள்ள நவீன கடைத் தொகுதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு, பாலை நகர் லெப்பை ஹாஜி சமாதான பூங்கா வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் கலந்து கொண்டார்.

நூற்றுக்கணக்கானோருக்கு பயன் தரும் மரக்கன்றுகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .