2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

‘புத்தாண்டு காலத்தில் அவதானத்துடன் செயற்படவும்’

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம் எஸ் எம் நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், வ.சக்தி, க.விஜயரெத்தினம், ஜவ்பர்கான்

"பிலவ" வருட தமிழ் - சிங்கள சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில் பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான அச்ச உணர்வு முழுமையாக நீங்காத நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திலும் கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு, மக்களை மிகுந்த அவதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் செயற்படுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவடைந்து வரும் நிலை காணப்பட்டாலும், சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில் அதிக சன நெரிசல் காணப்படுவதால், அவ்வாறான இடங்களுக்குச் செல்லும் போது, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படுமாறும், அது அவர்களுக்கும் அவர்களது சுற்றத்தாருக்கும் ஒட்டு மொத்த சமூகத்துக்கும் நன்மையளிக்கும் என்பதால் பொதுமக்களின் ஒத்துழைப்பை மிக வினயமாக வேண்டப்படுவதாக மாவட்டச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனவே, இவ்விசேட பண்டிகை காலங்களில் சனநெரிசல் அதிகமான இடங்களுக்குச் செல்வதை இயன்றளவு தவிர்த்து, வீட்டிலிருந்தவாறே தத்தமது குடும்பத்தாருடன் பண்டிகையைக் கொண்டாடுமாறும், அத்தியாவசியத் தேவைகளுக்காக மாத்திரம் வெளியில் செல்வது சாலச் சிறந்ததாக அமையுமெனவும், அவ்வாறு செல்லும் போது கண்டிப்பாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றல் வேண்டும் எனவும்  அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X