2025 மார்ச் 31, திங்கட்கிழமை

புதூரில் இருவர் கைது

R.Tharaniya   / 2025 மார்ச் 06 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு புதூர் பிரதேசத்தில் ஐஸ் போதை பொருள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன்  இருவரை புதன்கிழமை (05) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த பிரதேசத்தில் இரு குழுக்கள் இயங்கி வருவதாகவும் இவர்கள் வாள்வெட்டு மற்றும் சண்டைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.  இதில் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புபட்டு இவர்கள் தலைமறைவாகி வந்துள்ளனர் இந்த நிலையில் பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து போதை ஒழிப்பு ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்ஸ்பெக்டர்  ரி.கிருபாகரன் தலைமையிலான குழுவினர் சம்பவ தினமான புதன்கிழமை இரவு குறித்த பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்த வீட்டை  முற்றுகையிட்டு அங்கு 3100 மில்லிக்கிராம் ​ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவரையும்  கனரக கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் உட்பட இருவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் குமார் குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் பிரதேசத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தி வருபவர்கள் எனவும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X