2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

புதிய பொலிஸ் அத்தியட்சகர் கடமைகளை பெறுப்பேற்பு

Princiya Dixci   / 2021 மார்ச் 10 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு மாவட்ட புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க, மத அனுஸ்டானங்களுடன் சம்பிராய பூர்வமாக இன்று  (10) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். 

மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக இருந்த எம்.என்.எஸ்.மென்டிஸ், இரு தினங்களுக்கு முன்னர் இடமாற்றம் பெற்றுச் சென்ற நிலையில், அதற்கான வெற்றிடத்துக்கு சிரேஷட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க பொலிஸ் மா அதிபரால் நியமிக்கப்பட்டார். 

இதனையடுத்து, புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். 

இந்நிகழ்வில் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், 12 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டு அவரை வரவேற்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X