2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

புதிய தவிசாளர் தெரிவுக்கான திகதி அறிவிப்பு

Editorial   / 2021 பெப்ரவரி 18 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட மண்முனைப் பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு செய்வதற்கான கூட்டம், மார்ச் மாதம் 01ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மண்முனைப் பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு, இம்மாதம் 11ஆம் நடைபெறவிருந்த நிலையில், அன்றைய தினம் புதிய தவிசாளர் தெரிவுக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவொன்றை பிறப்பித்திருந்தது.

பின்னர் இந்த இடைக்கால தடையுத்தரவு, கடந்த ஓரிரு தினங்களுக்கு இரத்துச் செய்யப்பட்டதையடுத்து, மண்முனைப் பற்று பிரதேச சபைக்கான புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம், மார்ச் மாதம் 01ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுமென கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தலும், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X