2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

புதிய உறுப்பினராக கமால்தீன் நியமனம்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 07 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகர சபைக்கான நல்லாட்சிக்கான தேசிய முன்னியின் புதிய உறுப்பினராக எம்.ஐ.எம். கமால்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், நேற்று (06) சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

காத்தான்குடி நகர சபைக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் சுழற்சி முறையில் உறுப்பினர்களை அனுப்பும் திட்டத்தின் கீழ், புதிய உறுப்பினராக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்  எம்.ஐ.எம். கமால்தீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் நகர சபை உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கான புதிய உறுப்பினரைத் தெரிவு செய்யும் கலந்துரையாடல் கூட்டத்தின் தீர்மானத்துக்கமைவாக  இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .