Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 பெப்ரவரி 25 , பி.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
புதிய அரசமைப்புக்கான உத்தேச வரைபைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவுக்கு முன் வைக்கப்படும் தமிழர்கள் தொடர்பான நிரந்தரத் தீர்வுத் திட்டத்தோடு, 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள கோரிக்கைகளை முன்வைப்பதன் ஊடாக தமிழ் மக்கள் நன்மை அடைவார்கள் என பத்மநாபா மன்றத்தின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த விடயத்தை முன்வைக்குமாறு, தமிழ்த் தலைமைகளிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (25) ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டள்ள அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, “தீர்வுத்திட்டம் தொடர்பாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 46ஆவது கூட்டத் தொடர் விடயங்கள் தொடர்பாகவும் தமிழ்க் கட்சிகள் தங்களது செயற்பாடுகளை முடக்கியுள்ளன.
“தமிழ் மக்களின் உரிமைகள், அபிலாசைகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் பல விடயங்களை தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வருகின்றன. இத் ஷதருணத்தில், நிரந்தர தீர்வுத் திட்டம் தொடர்பாக தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு, கோரிக்கைகளை முன்வைப்பது சிறந்ததாகும்.
“ஏனெனில், இத்திட்டம் பாராளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அரசமைப்பில் உள்வாங்கப்பட்டு 30 வருடங்களாக மாகாண சபை முறமையின் கீழ் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இது அரசமைப்பில் உள்ளடக்க ப்பட்டுள்ளதால், இலகுவாக அமுல்படுத்த முடியும். மத்தியஅரசாங்கம் இதிலுள்ள பல விடயங்களை மீளப் பெற்றுக் கொண்டாலும், இணக்கப்பாட்டுடனும், சட்டரீதியாகவும் அமுல்படுத்த முடியும்.
“பெரும்பான்மையான கட்சிகள், இத்திட்டத்திலுள்ள நல்ல விடயங்களையும் குறைபாடுகளையும் முன்வைப்பது ஆரோக்கியமான விடயமே. தமிழ்த் கட்சிகள் பல முன்வைப்பதென்பது தற்காலிகமாக கையிலுள்ள விடயங்களை செயற்படுத்துவதற்கு சிறந்த வழியாகும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
27 Apr 2025
27 Apr 2025
27 Apr 2025