2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

பிரேதங்களால் மக்கள் அவதி

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 29 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் பிணங்களை வைப்பதிலும், அங்கு பிரேத பரிசோதனையை மேற்கொண்டு தமது உறவினர்களின் சடலங்களைப் பொறுப்பேற்பதிலும் தாம் பெரும் அவதிப்படுவதாக, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலங்களாக பல மாவட்டங்களில் இருந்து மாற்றப்பட்டு, சிகிச்சைபெற்று வந்த நிலையில் மரணிக்கும் பலரின் உடல்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு, சட்டவைத்திய அதிகாரிகள் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்டுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த இருவர் மரணமடைந்தனர். அவர்களின் உடல்கள், தற்போது மட்டக்களப்பு போதனா வைதியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதனால் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படும் திடீர் மரணம், தற்கொலை, விபத்து மரணம், பிரசவ மரணம், வைத்தியசாலையில் அனுமதித்து ஏற்படும் மரணமானவர்களின் உடல்களை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கமுடியாத நிலமை ஏற்பட்டுள்ளது.

அந்த உடல்களை பிரேத பரிசோதனைக்காக செங்கலடி மற்றும் ஆரையம்பதி போன்ற  வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது. அந்த வைத்தியசாலைகளில் சட்ட வைத்திய அதிகாரிகள் இல்லாதனால் உறவினர்களிடம் பிரேதங்களை உரிய நேரத்தில் கையளிப்பதில் பல சட்டரீதியான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

எனவே, இவ்விடயத்தில் உரிய கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .