2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

பிரதேச சபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

Princiya Dixci   / 2021 மார்ச் 09 , பி.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியாஸ் ஆதம்

ஏறாவூர்பற்று பிரதேச சபையின் உறுப்பினராக ஏறாவூர், மிச்நகரைச் சேர்ந்த அப்துல் மஜீத் மாஹிர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் வைத்து நேற்று (8) அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி சார்பாக போட்டியிட்டு, ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர் ஒருவர், அக்கட்சிக்கு எதிராகச் செயற்பட்டதால் அக்கட்சி ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொண்டு, அந்த உறுப்பினரைக் கட்சியிலிருந்து இடைநிறுத்தியது.

குறித்த உறுப்பினரின் பதவி மற்றும் கட்சி அங்கத்துவம் இல்லாதொழிந்தமை காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்துக்கே மாஹிர் அக்கட்சியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதேச சபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட மாஹிர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வின் போது இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க, தயாசிறி ஜெயசேகர, ஏறாவூர் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர், ஸ்ரீல ங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.எம்.அறூஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X