2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பிரசாந்தனுக்கு பதிலாக ஜெயராஜ் நியமனம்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி, வா.கிருஸ்ணா

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் விளக்கமறியலில் இருப்பதன் காரணமாக, அக்கட்சியின் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காக அவருக்குப் பதிலாக ஜெகநாதன் ஜெயராஜ், கட்சியின் பதில் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிச் செயலாளராக பணிபுரிந்து வந்த ஜெயராஜ், தற்போது கட்சியின் பதில் பொதுச் செயலாளராக கட்சியின் தலைமை பணியகத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெகநாதன் ஜெயராஜ், தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர் என்பதோடு, அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பால் சமூக சேவைகளையும் கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்டு வருகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .