2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

விளக்கமயிலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றுக்கு பிரசாந்தன் அழைத்துவராமல், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில், நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் இது தொடர்பான வழக்கு, சூம் தொழில்நுட்பம் ஊடாக இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரசாந்தனை எதிர்வரும் மார்ச் 01ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவை நீதிபதி விடுத்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன், கடந்த நவம்பர் மாதம் கொழும்பில் இருந்து வருகை தந்த சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டார்.

2008ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்த அவர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய, பிரசாந்தன் மீண்டும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X