2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

பியர் போத்தல்களுடன் பெண் கைது

Princiya Dixci   / 2021 மே 13 , பி.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவபர்கான்

விலை உயர்ந்த பியர் போத்தல்களை அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில், பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு  மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பண்டார தெரிவித்தார்.

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னக்குளம் கிராமத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலே, 500 மில்லி லீற்றர் எடையுள்ள 101 பியர் போத்தல்கள், நேற்று இரவு கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில், மேற்படி பியர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டதுடன், அங்கிருந்த பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணையும் பியர் போத்தல்களையும்  நீதிமன்றத்தில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கரடியனாறு பொலிஸ் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .